மேலும்

படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே? – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கைக்காக ஐக்கிய தேசியக் கட்சி காத்திருப்பதாக, அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தப் படுகொலைச் சந்தித்திட்டம் தொடர்பான உண்மைகளை இரண்டு வாரங்களுக்குள் வெளிப்படுத்துவேன் என்று கூறியி்ருந்தார்.

ஆனால் இரண்டு வாரங்களாகி விட்ட போதும்,  அவர் அளித்த வாக்குறுதிப்படி,  இன்னமும் அதனை வெளிப்படுத்தவில்லை.

சிறிலங்கா அதிபரும், நாமல் குமார் என்ற நபரும் சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

சதித்திட்டத்தில் தொடர்புபட்டுள்ளார் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீது  சிறிலங்கா அதிபர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

அதனை சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திலும் வெளியிடும் முற்றாக நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கருத்து “படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே? – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார”

  1. நக்கீரன் says:

    சிறிசேனா ஒரு பொய்யர். முன்னர் சொன்னவற்றை பின்னர் மறுதலித்து வருகிறார். இதனால் அவரது நம்பகத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளது. “நான் (சனாதிபதி) தேர்தலில் தோற்றிருந்தால் மகிந்த இராசபக்சா தன்னையும் தனது குடும்பத்தையும் ஆறடி குழி வெட்டி ஆழப்புதைத்திருப்பார்” என்று சொன்னது தேர்தல் பரப்புரைக்காகச் சொல்லப்பட்டது என்று சொன்னார்.

Leave a Reply to நக்கீரன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *