மேலும்

மாதம்: January 2019

5 புதிய ஆளுனர்கள் – வடக்கிற்கு இன்னமும் இல்லை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐந்து மாகாணங்களுக்கு நேற்று மாலை புதிய ஆளுனர்களை நியமித்துள்ளார். மேல் மாகாண ஆளுனராக அசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

மிகின் லங்கா காரில் வலம் வந்த மகிந்தவின் சோதிடர்

மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட சோதிடரின் பாவனைக்காக கார் ஒன்றை வழங்கியதன் மூலம், மிகின் லங்கா விமான நிறுவனத்துக்கு 8.2 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாமல் குமாரவுக்கு வாய்ப்பூட்டு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு எந்த கருத்தையும் வெளியிடக் கூடாது என்று நாமல் குமாரவுக்கு நீதிவான் தடை விதித்துள்ளார்.

மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொண்ட தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

மைத்திரி, ரணிலுக்கு சீன அதிபரின் தாமதமான வாழ்த்து

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த, சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அவரிடம் நேரில் கையளித்துள்ளார். நேற்று முன்தினம், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி பொதுச்செயலராக தயாசிறி – மைத்திரி அதிரடி

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள், அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான அணி ஒன்று வலுவடைந்து வரும் சூழலில், கட்சியின் பொதுச்செயலராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

மைத்திரிக்கு நெருக்கடி – இன்று காலை உருவாகிறது சுதந்திரக் கட்சி மாற்று அணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள்  தமது பதவியில் இருந்து விலகி, தனி குழுவொன்றை உருவாக்கவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச வங்கிகள் மீண்டும் கிரியெல்லவிடம் – சிறிலங்கா அதிபர் இணக்கம்

அரசாங்க வங்கிகளை பொது நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 05ஆம் நாள் வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மார்ச் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.