மேலும்

அரச நிறுவனங்களைப் பிடித்த மோசடியாளர்கள் – மைத்திரிக்கு தலைவலி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றம்சாட்டப்பட்ட சிலர் அண்மையில், முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட விவகாரம் சிறிலங்கா அதிபருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி மாற்றத்தை அடுத்து. ராஜபக்சவினர், அரசதுறை நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு தமது ஆதரவாளர்களை நியமித்து வருகின்றனர்.

சிறிலங்கவின் விமான சேவை நிறுவனத்தின் தலைவராக கபில சந்திரசேனவும், சிறிலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நாலக கொடகேஹவவும்,  நியமிக்கப்பட்டமை கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக இவர்கள் விசாரணைகளை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே இந்த நியமனங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இதுபற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், கபில சந்திரசேன மற்றும் நாலக கொடகேஹவவின் நியமனங்களைத் தாம் எதிர்ப்பதாகவும், அந்த நியமனங்கள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

முன்நோக்கிச் செல்ல வேண்டிய தேவை இருந்ததால் தான், ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளவர்களை நியமிப்பதற்கு தாம் தெரிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *