மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது- கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளதை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக பொறுப்புக்கூறலை வலியுறுத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை இந்தக் கைது நடவடிக்கையை வரவேற்பதாக, திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
ஏஎவ்பி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,
விசாரணைகள் தொடர்கின்றன என்பதற்கான அறிகுறியாக இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.
எங்களுக்குத் தேவையானது ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மை.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
