மேலும்

அனுராதபுர நோக்கிய நடைபவனி – இன்று மூன்றாவது நாளில்

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடரவுள்ளது.

அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்றுமுன்தினம் காலை ஆரம்பித்த நடைபவனியில் பங்கேற்ற மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு இயக்கச்சியை வந்தடைந்தனர்.

அங்கு தங்கி விட்டு, நேற்றுக்காலை மீண்டும் நடைபவனியை ஆரம்பித்த மாணவர்கள் கிளிநொச்சியை நேற்று நண்பகல் கடந்து சென்றனர்.

இன்று மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ள இந்த நடைபவனிக்கு, பொது அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *