சீஷெல்ஸ் இராணுவத்துக்கு சிறிலங்காவில் பயிற்சி
சீஷெல்ஸ் நாட்டு இராணுவத்தினருக்கு, சிறிலங்காவில் இராணுவப் பயிற்சி அளிக்குமாறு அந்த நாட்டின் அதிபர், டானி போரே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீஷெல்ஸ் சென்றிருந்த போதே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை பயிற்சி மற்றும் சட்ட வரைவு போன்றவற்றுக்கும், சீஷெல்ஸ் நாட்டு மருத்துவர்களுக்கு சிறிலங்காவில் பயிற்சி அளிப்பதற்கும் சீஷெல்ஸ் அதிபர் சிறிலங்காவிடம் உதவி கோரியுள்ளார்.
இதேவேளை சிறிலங்கா அதிபர் இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முற்பகல் கொழும்பு திரும்பினார்.