மேலும்

மணிவண்ணன் போட்டியில் இருந்து நீக்கம் – இறுதி வாக்கெடுப்பில் ரெமீடியஸ்

யாழ். மாநகர முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வி. மணிவண்ணன், வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்று காலை நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ஈபிடிபி நிறுத்திய ரெமீடியசும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வி. மணிவண்ணனும், தலா 13 வாக்குகளைப் பெற்றனர்.

இதனால், இறுதி வாக்கெடுப்புக்காக இவர்களில் ஒருவரை திருவுளச்சீட்டுமூலம் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, திருவுளச்சீட்டில் இவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு. அவற்றில் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ரெமீடியசின் பெயர் தெரிவானது.

இதையடுத்து, மணிவண்ணன் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது இரகசிய வாக்கெடுப்பில் ஆர்னோல்டும், ரெமீடியசும் மோதவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *