மேலும்

சிதம்பரத்துக்கு யாத்திரிகளை அனுப்ப கப்பலைத் தேடும் ஆளுனர்

cruise-shipதமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில் பங்கேற்பதற்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

மார்கழித் திருவாதிரைத் திருவிழா நேற்று ஆரம்பமானது. எதிர்வரும் ஜனவரி 3ஆம் நாள் ஆருத்ரா தரிசனத்துடன் இந்த திருவிழா நிறைவடையும்.

இதில் பங்கேற்கும் வட இலங்கை பக்தர்களின் நலன்கருதி, காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்த, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், திருவாதிரை திருவிழாவில் பங்கேற்பதற்காக, நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் கப்பலுக்காக காத்திருக்கின்றனர்.

அதேவேளை, பக்தர்களை சென்னைக்கு ஏற்றிச் செல்வதற்கான கப்பல் இன்னமும் ஒழுங்கு செய்யப்படவில்லை.

பொருத்தமான கப்பலைத் தேடும் பணிகளை வடக்கு மாகாண ஆளுனர் மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் நடராஜன், நாங்கள் யாத்திரிகர்களுக்கு தேவையான நுழைவிசைழவை வழங்குவோம். நூறு வரையானோர் எம்மிடம் பதிவுகளை செய்துள்ளனர். இந்தவார தொடக்கத்தில் இன்னும் அதிகமானோர் பதிவுகளைச் செய்யலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் செல்வதற்கான கப்பல் இன்னமும் ஒழுங்கு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *