மேலும்

இந்திய- சிறிலங்கா கடற்படைகள் இணைந்து கூட்டு சமுத்திரவியல் ஆய்வு

INS Darshakசிறிலங்காவின் தெற்கு கடல் பகுதியில், இந்திய கடற்படையும், சிறிலங்கா கடற்படையும் இணைந்து, கூட்டு சமுத்திரவியல் ஆய்வை மேற்கொள்ளவுள்ளன.

2017 மார்ச் 30 ஆம் நாள் தொடக்கம், 2017 மே 11ஆம் நாள் வரை இந்த கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தர்ஷக் என்ற நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல் இந்தத ஆய்வில் ஈடுபடுத்தப்படவுள்ளது. சிறிலங்கா கடற்படையினரும் இணைந்து இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இந்த ஆய்வுப் பயணத்தின் போது, இந்திய கடற்படைக் கப்பல் கொழும்பு, காலி துறைமுகங்களுக்கும் செல்லவுள்ளதுடன், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *