சிறிலங்கா அருகே ஈரானிய மசகு எண்ணெயுடன் சென்ற கப்பலை மடக்கியது அமெரிக்கா
ஈரானிய மசகு எண்ணெயைக் கடத்தியதற்காக, முன்னர் தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றை, சிறிலங்காவுக்கு அருகே, அமெரிக்க படைகள் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன.
ஈரானிய மசகு எண்ணெயைக் கடத்தியதற்காக, முன்னர் தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றை, சிறிலங்காவுக்கு அருகே, அமெரிக்க படைகள் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng) காலி கோட்டையில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
செங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் எதிர்வரும் 4ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின், 71 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.
திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்கள், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயற்படத்தக்க வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன. துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்பரப்பில் சமுத்திரவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இந்திய கடற்படையின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான ஜமுனா, நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணி இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி, நீர்கொழும்பு மாநகரசபைகளில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதும், இந்த இரு மாநகரசபைகளின் முதல்வர் பதவிக்கான தேர்தல்களில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியிடம், ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.
எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 67 வேட்பாளர்கள், மோசமான குற்றப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.