மேலும்

சந்தியா எக்னெலிகொடவுக்கு துணிச்சலான பெண் என்ற விருது வழங்குகிறது அமெரிக்கா

sandiya-egneligodaகடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்கா துணிச்சலான பெண் என்ற அனைத்துலக விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

அனைத்துலக அளவில் துணிச்சலான பெண்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விருதுகளை வழங்கவுள்ளது.

இந்த விருதைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தியா எக்னெலிகொட அடுத்தவாரம் வொசிங்டனுக்குப் பயணமாகவுள்ளார்.

‘தனது கணவனின் வழக்கில் மாத்திரமன்றி, சிங்கள, தமிழ் சமூகங்களில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சார்பாக நீதிக்காகப் போராடும் இவர்,  சிறிலங்காவின் நீதி, நல்லிணக்கத்துக்கான ஒரு ஆழமான சின்னமாக, விளங்குகிறார்’ என்று இவரை இந்த விருத்துக்குப் பரிந்துரைத்துள்ள கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *