மேலும்

37 ஆண்டு ஆயுதப் போராட்டத்தில் 25,363 படையினர் பலி – சிறிலங்கா அரசு தகவல்

sri-lanka-armyதமிழ்ப் பிரிவினைவாதப் போராட்டத்தினால், 25,363 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக இது தொடரபான விபரங்களை வெளியிட்டார்.

“1972ஆம் ஆண்டு தொடக்கம், 2009 ஆம் ஆண்டு வரையான காலத்தில், போர் நடவடிக்கைகளினால், சிறிலங்கா இராணுவத்தினர், விமானப்படையினர், கடற்படையினர், மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 25,363 படையினர் கொல்லப்பட்டனர்.

மேலும், 38,675 சிறிலங்கா படையினர் காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்தனர்.

இதில், சிறிலங்கா இராணுவத்தினர் 23,661 பேர் மரணமடைந்துடன்,  37,957 பேர் காயமடைந்தனர்.

சிறிலங்கா கடற்படையினர் 714 பேர் உயிரிழந்ததுடன். 472 பேர் காயமடைந்தனர்.

சிறிலங்கா விமானப்படையினர் 443 பேர் மரணமடைந்ததுடன், 234 பேர் காயமடைந்தனர்.

சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 545 பேர் மரணமடைந்ததுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

போரில் காயமடைந்த முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் பற்றிய புள்ளிவிபரங்கள் இல்லை.

இந்தக் காலகட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றிய பதிவுகள் அரசாங்கத்திடம் இல்லை. ” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *