மேலும்

மாதம்: September 2016

நுழைவிசைவு விண்ணப்பத்தில் இருந்து தமிழீழத்தை நீக்குவதற்கு டென்மார்க் இணக்கம்

நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில், தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்திருந்தமைக்கு சிறிலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ள டென்மார்க், அந்தப் பட்டியலில் இருந்து தமிழீழத்தை நீக்குவதாகவும் உறுதியளித்துள்ளது.

பளையில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – நெல்லியடி வாசிகள் ஐவர் பேர் பலி

தென்மராட்சி- பளைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், அந்த இடத்திலேயே நான்கு பேர் பலியானதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன் வோக் நடனம் ஆடுகிறாரா பான் கீ மூன்?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது யுத்த அனுபவத்தைப் பதிந்துள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்கின்ற நூலை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்த சிறிலங்கா இராணுவம்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்  நடத்தக் கூடும் என்று  அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய   ராஜபக்சவும், சீன இராணுவத் தளபதியும் எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்துள்ளார் மேஜர்  ஜெனரல் கமால் குணரத்ன.

எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டார் சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி

சிறிலங்கா விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ககன் புலத்சிங்கள எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பூர் அனல் மின் திட்டத்தைக் கைவிடுவது குறித்து இந்தியாவுக்கு அறிவிக்கவில்லை

சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு  அறிவிக்கவில்லை என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சம்பூர் அனல்மின் நிலைய திட்டம் கைவிடப்பட்டது – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு

இந்தியாவுடன் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவிருந்த சம்பூர் அனல் மின் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கொலைவெறித் தாக்குதல் – படுகாயங்களுடன் தப்பினார்

ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், வேலூர் மத்திய சிறைச்சாலையில், வடமாநில ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இரும்புக்கம்பியால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தார்.

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க கடற்படை அளித்த பயிற்சிகள் நிறைவு

திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின், வெடிபொருட்களைச் செயலிழக்கச் செய்யும் 5ஆவது நடமாடும் பிரிவு அளித்து வந்த பயிற்சி கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது.

சிறிலங்காவில் காணாமற்போனோர் விவகாரம் நாளை மறுநாள் ஜெனிவாவில் ஆராய்வு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் காணாமற்போகச் செய்யப்பட்டோர் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் ஆராயப்படவுள்ளது.