மேலும்

சம்பூர் அனல்மின் நிலைய திட்டம் கைவிடப்பட்டது – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு

sampoorஇந்தியாவுடன் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவிருந்த சம்பூர் அனல் மின் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சஞ்சய் ராஜரட்ணம், இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவுடன் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவிருந்த சம்பூர் அனல் மின் திட்டத்தை, சிறிலங்காவின் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் அமைச்சு தொடர்ந்து முன்னெடுக்காது என்று அவர் உயர்நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தினார்.

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் அமைச்சின் செயலர் கலாநிதி அமரநாத் படகொட இதனை அறிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *