மேலும்

மாதம்: September 2016

மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முந்திய குடியிருப்புத் தொகுதி – தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிப்பு

மன்னார் – கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படும், அகழ்வாராய்ச்சியில், 1400 ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் வசித்ததை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு- யாழ்ப்பாணத்தில் ரணில்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகளை குறிவைக்கிறது கூட்டு எதிரணி

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற உயர்மட்டத் தளபதிகளை தமது அரசியல் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்வதற்கு, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

பிரபாகரனின் அடையாள அட்டையை நினைவுப்பொருளாக வைத்திருக்கும் கமால் குணரத்ன

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையைத் தாமே நினைவுப் பொருளாக எடுத்து வைத்திருப்பதாக, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அணிசேரா மாநாட்டைப் புறக்கணித்த மைத்திரி இன்று நியூயோர்க் பயணமாகிறார்

ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று நியூயோர்க் புறப்பட்டுச் செல்லவுள்ளார். 

நந்திக்கடலுக்கான பாதையா- அதிகாரத்தை அடைவதற்கான பாதையா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு தற்போதைய அதிபரோ அல்லது பிரதமரோ அல்லது இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அமைச்சர்களோ எவரும் அழைக்கப்படவில்லை.

வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்து செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தமாதம் முதலாம் நாள் நியூசிலாந்து செல்லவுள்ளார். நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ நேற்று இதனை அறிவித்தார்.

சிறிலங்காவுடனான இராணுவ விநியோக உடன்பாட்டை புதுப்பிக்க அமெரிக்கா விருப்பம்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுடன் செய்து கொண்ட இராணுவ விநியோக உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் பாரிய தீ – 60இற்கு மேற்பட்ட புடைவைக் கடைகள் நாசம்

கிளிநொச்சி பொதுச்சந்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீவிபத்தில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 60இற்கு மேற்பட்ட புடைவைக் கடைகளும், அனைத்துப் பழக்கடைகள் முற்றாக எரிந்து நாசமாகின.

புலிச் சந்தேகநபரைச் சுட்டுக்கொன்ற மேஜருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு?

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தும், 2 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் தர அதிகாரிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.