மேலும்

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க கடற்படை அளித்த பயிற்சிகள் நிறைவு

us-navy-train-sln-1திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின், வெடிபொருட்களைச் செயலிழக்கச் செய்யும் 5ஆவது நடமாடும் பிரிவு அளித்து வந்த பயிற்சி கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது.

நீருக்கு அடியில் வெடிக்காதநிலையில் உள்ள வெடிபொருட்களை அகற்றுவது தொடர்பாக சிறிலங்கா கடற்படையின் சுழியோடிகளுக்கு, அமெரிக்க கடற்படை அதிகாரிகள், இந்தப் பயிற்சிகளை அளித்து வந்தனர்.

சிறிலங்கா கடற்படை சுழியோடிகளின் திறனையும், ஆற்றலையும் அதிகரிக்கும் வகையில், இந்தப் பயிற்சிகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த செப்ரெம்பர் 8ஆம் நாள்,இந்தப் பயிற்சிகள் நிறைவடைந்தன.

அமெரிக்க கடற்படையின் வெடிபொருள் செயலிழக்கச் செய்யும் 5 ஆவது நடமாடும் பிரிவின் தளபதி பென்ஜமின் கிப்பர்லி பயிற்சி நிறைவு நிகழ்வில்,  கலந்து கொண்டு, பயிற்சியை முடிந்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

us-navy-train-sln-1us-navy-train-sln-2us-navy-train-sln-3

அத்துடன், நீருக்கு அடியில் பயன்படுத்தும் ஒளிப்பதிவுக் கருவி, புவிநிலைகாட்டும் கருவித் தொகுதி, மற்றும் தொடர்புடைய கருவிகளைக் கொண்ட தொகுதி ஒன்றையும் அமெரிக்க குழுவினர் சிறிலங்கா கடற்படையினருக்குப் வழங்கினர்.

ஏற்கனவே பசுபிக் தீவான குவாமில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்திலும், சிறிலங்கா கடற்படையினருக்கு நீருக்கு அடியில் வெடிபொருட்களை அகற்றும் பயிற்சிகளை அமெரிக்க கடற்படையினர் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *