சிறிலங்காவில் இந்தியர்களைப் பின்தள்ளும் சீனர்கள்
சிறிலங்காவின் சுற்றுலாப் பயணிகள் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்தியர்களை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு, சீனர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
சிறிலங்காவின் சுற்றுலாப் பயணிகள் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்தியர்களை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு, சீனர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்தி விரிவாக்கம் செய்வது தொடர்பாக இந்தியாவுடனோ, இந்திய நிறுவனத்துடனோ, சிறிலங்கா அரசாங்கம் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த 45 நிமிடச் சண்டையிலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், அதற்கு முதல் நாள் நடந்த சண்டையில், புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானும் கொல்லப்பட்டார் என்றும், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, இராணுவப் புலனாய்வு அதிகாரியான சார்ஜன்ட் பிரேமானந்த உடலகம, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிலும் தொடர்புபட்டுள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல் நேற்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உயர்ந்தபட்ச ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியன குறித்து புகழ்ந்துரைத்துள்ள சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது என்றும் பாராட்டியுள்ளார்.
சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியளவிற்கு செல்வாக்கைக் கொண்டுள்ள இந்திய உயர் ஆணையாளரை சிறிலங்கா ஊடகங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இந்தியா எமது அயல்நாடாக இருப்பதே இதற்கான காரணமாகும்.
சிறிலங்காவை மலேரியா நோயில் இருந்து விடுபட்ட நாடாக, உலக சுகாதார நிறுவனம் நேற்று பிரகடனப்படுத்தியுள்ளது. நுளம்புகளால் பரவும் மலேரியா நோயை முற்றாக ஒழித்துள்ள நாடுகளின் வரிசையில் சிறிலங்கா இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில், மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், ஐந்து பேர் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.