மேலும்

‘நந்திக்கடலுக்கான பாதை’ யை வெளியிட்டு வைத்தார் மகிந்த

Road to Nandikadal -launch (2)சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல் நேற்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஆனந்தா கல்லூரில் நடந்த இந்த வெளியீட்டு விழாவில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், நூலின் முதல் பிரதியை, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன கையளித்தார்.

இந்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், கலாநிதி றொகான் குணரத்ன, கலாநிதி தயான் ஜெயதிலக உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Road to Nandikadal -launch (2)????????????????????????

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் அனுபவங்களை மேஜர் ஜெனரல் கமால்  குணரத்ன, தனது 800 பக்க, நூலில் விரிவாக விபரித்துள்ளார்.

இவர் இறுதிக்கட்டப் போரில், 53ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *