மேலும்

சிறிலங்காவில் இந்தியர்களைப் பின்தள்ளும் சீனர்கள்

india-chinaசிறிலங்காவின் சுற்றுலாப் பயணிகள் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்தியர்களை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு, சீனர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

சீனாவில் இருந்து, கடந்த ஓகஸ்ட் மாதம், 27,519 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 11 வீத அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டில், முதல் எட்டு மாதங்களில் மாத்திரம், சீனாவில் இருந்து 190,992 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 32 வீத அதிகரிப்பாகும்.

அதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாதம் 24,418  இந்திய சுற்றுலாப் பயணிகளே சிறிலங்கா வந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம், சீனாவில் இருந்து 30,631 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவில் இருந்து 26,559 சுற்றுலாப் பயணிகளும் சிறிலங்கா வந்திருந்தனர்.

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவே முன்னணியில் இருந்து வந்துள்ளது. எனினும், தொடர்ந்து இரண்டு மாதங்களாக சீனர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *