மேலும்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிராந்தியத்துக்கு முக்கியமானது – துருக்கி வெளிவிவகார அமைச்சர்

turkeyFM-mangalaசிறிலங்காவின்  பாதுகாப்பும் உறுதித்தன்மையும் இந்தப் பிராந்தியத்துக்கும் அதற்கு அப்பாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடனான இருதரப்புப் பேச்சுக்களின் பின்னர், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு,

“சிறிலங்காவின் புவியியல் அமைவிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால், சிறிலங்காவின்  பாதுகாப்பும் உறுதித்தன்மையும் இந்தப் பிராந்தியத்துக்கும் அதற்கு அப்பாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

turkeyFM-mangala

துருக்கியும் சிறிலங்காவும் பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கலாசாரம், சுற்றுலா, விவசாயம், சக்தி, கல்வி ,சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கும் இணங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்றைய பேச்சுக்களின் போது, இருநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.

அதேவேளை, சிறிலங்காவுக்கு 350 மில்லியன் டொலர் கடன் வழங்கவும் துருக்கி முன்வந்துள்ளது.

துருக்கிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *