மேலும்

பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத்தமிழ் மாணவன் தெரிவு

maria anoj (1)சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், இந்த ஆண்டின் சிறந்த மாணவராக, ஈழத்தமிழ் மாணவனான அருளானந்தம் மரிய அனோஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பேர்ணில் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.

மாணவர்களின் கல்விச் செயற்பாடு, புறக்கிருத்திய நடவடிக்கைகள், அனைத்துக்கும் மேலாக நற்பழக்க வழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தெரிவு இடம்பெற்று வருகின்றது.

பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர்கள் கல்வித் திணைக்களத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

தெரிவுக்குழுப் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தெரியாமலேயே பாடசாலைகளுக்கு வருகை தந்து, அவதானங்களை மேற்கொண்டு அந்த விபரங்களை அடிப்படையாக வைத்தே இறுதி முடிவை எட்டுவார்கள்.

maria anoj (2)

அத்தகைய தெரிவில் தமிழரான செல்வன் அருளானந்தம் மரிய அனோஜ் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டு புலம்பெயர் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

பேர்ண் – பெத்லகேமில் வசிக்கும் அருளானந்தம் (வின்சன்) சந்திரவதனா தம்பதிகளின் ஏக புதல்வனான மரிய அனோஜ் சுவிஸ் நாட்டிலேயே பிறந்தவர் என்பதுவும், வெளிநாட்டுப் பிள்ளைகள் அதிகமாக வாழும் பிராந்தியத்தில் வசிப்பவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்து பல்கலைக் கழகம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வில் சுவிசில் வாழும் 148 பிறநாட்டு இனங்களுள் முதன்மைபெற்ற இனமாக தமிழ் இனம் விளங்குவதாகவும், இன்னும் ஒரு தசாப்த காலத்தில் நாட்டின் உயர் பதவிகளில் 35 வீதமானவற்றை தமிழ் இளையோரே வகிப்பர் எனவும் எதிர்வு கூறியுள்ளமையும் நினைவிற் கொள்ளத்தக்கது.

ஒரு கருத்து “பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத்தமிழ் மாணவன் தெரிவு”

  1. arni narendran says:

    Congratulation to Mr. Selvam Arulanantham for his exemplary acheivement. May he be Blessed with an illuminating career in life and serve the Swiss Nation and humanity at large.
    arni narendran
    mumbai India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *