மேலும்

Tag Archives: குடிவரவு

அமெரிக்க கடற்படைக்கு விநியோக வசதி – நாடாளுமன்றத்தில் சூடான விவாதம்

இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு விநியோக   ஆதரவு வழங்கும் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

முப்படையினரைக் கட்டுப்படுத்தாத சிறிலங்காவின் குடிவரவுச் சட்டங்கள்

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரிவிக்காமல், சிறிலங்காவின் ஆயுதப்படை அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அதிகாரம் உள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிகால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமை

அமெரிக்காவின் அமைதிப் படையணியை (United States Peace Corps) சேர்ந்த உறுப்பினர்களுக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் ஆட்குறைப்பு

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் கூரை பெயர்ந்து விழுந்தது – குடிவரவுச் சோதனைகள் பாதிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததால், குடிவரவுத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டன. கடும் மழை காரணமாக, கடந்த  வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதியில் உள்ள கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழர் மரணம்

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், இலங்கைத் தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தேடுதல் – 27 இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, நுழைவிசைவு விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 27 இந்தியர்களை சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைக் கோருகிறார் கம்மன்பில

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தருமாறு சிறிலங்கா குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

இணையத்தள ஆசிரியரை கைது செய்ய சிறிலங்கா நீதிமன்றம் அனைத்துலகப் பிடியாணை

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில், லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் டொன் பிரதீப் சந்துருவன் சேனாதீரவைக் கைது செய்ய கம்பகா பிரதம நீதிவான் அனைத்துலக பிடியாணை பிறப்பித்துள்ளார்.