மேலும்

இத்தாலி செல்ல முயன்ற விமல் வீரவன்ச கட்டுநாயக்கவில் கைது

vimal-weerawansaதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காலாவதியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற போதே, அவர் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.

இன்று அதிகாலை இத்தாலியின் ரோம் நகருக்கு புறப்படும் விமானத்தில் அவர் பயணம் செய்யவிருந்தார்.

ஆனால் அவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு காலாவதியாகியிருந்தது.

தனது கடவுச்சீட்டு தொலைந்து போனதாக கூறி, விமல் வீரவன்ச அண்மையில் புதிய கடவுச்சீட்டு ஒன்றை பெற்றிருந்தார்.

புதிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே அவர், இத்தாலி செல்வதற்கான நுழைவிசைவையும் பெற்றிருந்தார்.

எனினும், தொலைந்து போனதாக கூறப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே இன்று அதிகாலை அவர் ரோமுக்குச் செல்ல முயன்றார்.

குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், இதனைக் கண்டுபிடித்து அவரைத் தடுத்து வைத்தனர்.

இதையடுத்து இன்று பிற்பகல் அவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள விமல் வீரவன்ச இன்று பிற்பகல்  நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதிவான் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

ஏற்கனவே, விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, மோசடியான முறையில் இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *