ஒபாமாவின் சிறிலங்கா வருகை குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு தெரியாதாம்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறிலங்கா பயணம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இது தொடர்பாக தாம் எதையும் அறியவில்லை என்றும், அதிகாரபூர்வமாக தமக்கு எதுவும் தெரியாது என்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.