பாலச்சந்திரன் சண்டையிலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா
வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதான குற்றச்சாட்டையும், பாலச்சந்திரன் பிரபாகரன் படுகொலைக் குற்றச்சாட்டையும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.