மேலும்

மகிந்தவின் பாதுகாப்புக்குப் பொறுப்பான கேணல் மகேந்திர பெர்னான்டோவிடம் விசாரணை

col-mahendra-fernando (1)சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான, கேணல் மகேந்திர பெர்னான்டோ, சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவினால் இன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் 25ம் நாள் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில், துப்பாக்கியுடன் நுழைந்த நாமல் ராஜபக்சவின் மெய்க்காவலரான, இராணுவ கோப்ரல் ஒருவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நெருங்கியிருந்தார்.

இந்தநிலையில், கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை விசாரணை நடத்தும் அதேவேளை சிறிலங்கா இராணுவமும் சிறப்பு விசாரணையை நடத்தி வருகிறது.

இந்த சிறப்பு விசாரணைக் குழுவே மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான கேணல் மகேந்திர பெர்னான்டோவிடம் விசாரணைகளை நடத்தியுள்ளது.

col-mahendra-fernando (1)

col-mahendra-fernando (2)

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த, கோப்ரலே நாமல் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இதனை மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவைச் சேரந்த அதிகாரியை, இன்னொருவரின் பாதுகாப்புக்கு அனுப்பியது குறித்தே, கேணல் மகேந்திர பெர்னான்டோவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கேணல் மகேந்திர பெர்னான்டோ, மகிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான- விசுவாசமான படை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *