மேலும்

சில வாரங்களுக்கு பொறுத்திருங்கள் – சிறிலங்கா அமைச்சர்களுக்கு ஜோன் கெரி ஆலோசனை

ranil-john kerryஈரானுடனான அமெரிக்காவின் உறவுகள் விரைவில் சுமுகமடையும் என்றும் இன்னும் சில வாரங்களுக்கு சிறிலங்காவைப் பொறுத்திருக்குமாறும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தடைகளால், ஈரானுக்கு நேரடியாக தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், தேயிலைக்கு உதவி நிதி அளிக்க வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடனான சந்திப்பின் போது, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் இதுகுறித்து, கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

ranil-john kerry

அப்போதே, ஈரானுடனான தமது நாடு நடத்தும் பேச்சுக்கள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதன் விளைவுகள் இன்னும் சில வாரங்களில் தெரியவரும் என்பதால், அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறும், ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை சிறிலங்கா அமைச்சர் ஒருவர், நேற்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தடை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், ஈரானுக்கு ஆண்டு தோறும் 200 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *