மேலும்

மகிந்தவின் பெறாமகன் உதயங்க வீரதுங்க டுபாய் விடுதியில் – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

udayanga-weeratungaசிறிலங்காவினால் தேடப்பட்டு வரும், ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாயில் தங்கியிருப்பதாக, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரேனிய பிரிவினைவாதப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க, ரஷ்யாவுக்கான தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவுக்கு திரும்பாமல் ஒளிந்து வாழ்கிறார்.

மகிந்த ராஜபக்சவின் பெறாமகனான இவர், மிக் போர் விமானக் கொள்வனவிலும் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தநிலையில், அவர் ஈரானில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்த வாரம் அவர் டுபாயில் உள்ள மரியட் விடுதியில் தங்கியுள்ளதாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அங்கிருந்து அவர் கொழும்பிலுள்ள பலருக்குத் தொலைபேசி அழைப்புகளை எடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திர கடவுச்சீட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எவ்வாறு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார் என்று சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.

அவர் தனது சாதாரண கடவுச்சீட்டை இதற்கெனப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

உக்ரேனில் அவருக்கு சொத்துக்கள் மற்றும் உணவகம் என்பன உள்ள போதிலும், அங்கு அவரால் செல்ல முடியாது.

அவரைக் கைது செய்வதற்கு அங்கு சட்டவாளர்களால் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *