மேலும்

உலங்குவானூர்தி அணியை தென்சூடானுக்கு அனுப்புகிறது சிறிலங்கா

slaf-unpkf (1)சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காப் படையினருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தென்சூடானில் பணியாற்றும் ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தி அணியொன்று இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

மூன்று எம்.ஐ-17 உலங்குவானூர்திகளுடன், 18 அதிகாரிகள் உள்ளிட்ட 104 விமானப் படையினர் இதற்காக தென்சூடான் செல்லவுள்ளனர்.

அடுத்த மாதம் தொடக்கம் இவர்கள் அங்கு அமைதிகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

ஏற்கனவே சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தி அணியொன்று மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா அமைதிப்படையுடன் இணைந்து பணியாற்றுகிறது.

இந்த நிலையிலேயே தென்சூடானுக்கு அடுத்த அணி அனுப்பிவைக்கப்படவுள்ளது.

slaf-unpkf (1)

slaf-unpkf (2)

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்காப் படையினருக்கு தென்சூடானில் ஐ.நா அமைதிப் படையில் பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியில் இருந்த காலத்திலேயே, ஐ.நா படையில் பணியாற்றும் வாய்ப்பு சிறிலங்கா படையினருக்கு கிடைத்திருந்தது.

தற்போது ஹெய்டியில் 950 சிறிலங்கா படையினரும், லெபனானில், 150 படையினரும், ஐ.நா அமைதிப்படையில பணியாற்றுகின்றனர்.

ஒரு கருத்து “உலங்குவானூர்தி அணியை தென்சூடானுக்கு அனுப்புகிறது சிறிலங்கா”

  1. இலட்சியம்ILATCHIYAM
    இலட்சியம்ILATCHIYAM says:

    முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கு ஒரு குரல் https://www.facebook.com/Serendibmedia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *