மேலும்

மோடியைச் சந்தித்தார் மங்கள சமரவீர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று மதியம் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.(இரண்டாம் இணைப்பு)

இந்தச் சந்திப்பு புதுடெல்லியில் உள்ள  இந்தியப் பிரதமரின் ரேஸ்கோஸ் வீதி இல்லத்தி்ல் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் ஆரம்பமாகியது.

சுமார் 30 நிமிடங்கள் வரை நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கு வருகை தருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மங்கள சமரவீர அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆழமான உறவுகளை வலுப்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும், இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, நெருக்கமாகவும் விரிவாகவும் பணியாற்றவும், இந்தச் சந்திப்பின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

இதனிடையே வரும் மார்ச் முதல் வாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங், வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலர் சுசித்ரா துரை, கொழும்புக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *