மேலும்

மகிந்தவுக்கு ஆதரவு திரட்டும் மோடியின் ஆலோசகருக்கு 100 மில்லியன் ரூபா கட்டணம்

Arvind Guptaசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திப் பரப்புரை மேற்கொள்வதற்காக, வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் அரவிந்த் குப்தாவுக்கு 100 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைத்தளப் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக இருந்தவருமான அரவிந்த் குப்தா, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உதவுவதாக, தி ஹிந்து நாளிதழ் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், சிறிலங்கா அதிபருக்கு ஆதரவான பரப்புரையின் ஒருகட்டமாக சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க, அரவிந்த் குப்தாவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவான குழுவொன்று வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகவும், அவருக்கு 100 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த நொவம்பர் மாதம் 21ம் நாள், தமது நான்கு சகபாடிகளுடன் கொழும்பு வந்த அரவிந்த் குப்தா, சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவற்றுள் சிறிலங்கா தொழலத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகாரசபையினால் தடைசெய்யப்பட்டுள்ள ஊடகங்களும் அடங்கியுள்ளன.

ராஜபக்சவினால், பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது உண்மையா என்று அரவிந்த் குப்தாவிடம் ஊடகம் ஒன்று எழுப்பியதற்கு, தான் சுதந்திரமானவர் என்றும், எவருக்காகவும் தன்னால் பணியாற்ற முடியும் என்றும் ஒரே வரியில் பதிலளித்துள்ளார்.

அதேவேளை, அரவிந்த் குப்தா தலைமையிலான குழு அலரி மாளிகையில் இருந்து இயங்குவதாக சில வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேறு சில தரப்புகள், இந்தக் குழுவினருக்கு சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகாரசபையில் தனியான இடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன.

இந்தக் குழுவினர், சிறிலங்கா அதிபர் செயலக உள்ளூர் ஊடக அதிகாரிகளுக்கு உதவி வருவதாகவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இந்த செயற்பாடு குறித்து தாம் அறியவில்லை என்று தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகாரசபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *