மேலும்

அலரி மாளிகையில் வைத்து சிறிரங்காவைத் தாக்கினார் ரிசாத் பதியுதீன்

rishad bathiudeenஅலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் நடந்த இராப்போசன விருந்தின் போது, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்காவை, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தாக்கியதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு, ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவை, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் முடிவை எடுப்பதற்காக, ரிசாத் பதியுதீன் பணம் பெற்றிருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே, அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் நடந்த இராப்போசன விருந்தின் போது, சிறிரங்கா மீது, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா தரப்பிலோ, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தரப்பிலோ இதுவரை மறுப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *