மேலும்

810 இணையத்தளங்களை குறிவைக்கிறது சிறிலங்கா?

websiteவெளிநாடுகளில் இருந்து செயற்படும் – சிறிலங்கா குறித்த செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான பரப்புரையில், இணையத்தளங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

இந்தநிலையிலேயே, வெளிநாடுகளில் இருந்து செயற்படும்- சிறிலங்கா தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை முடக்கும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனை அடிப்படையாக கொண்டு, வெளிநாடுகளில் இருந்து செயற்படும் 810 இணையத்தளங்களைப் போலியானவை என்று தகவல் தொடர்பு தொழில்நுட்ப முகவரகம், அடையாளப்படுத்தியுள்ளது.

இந்த இணையத்தளங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுவதாகவும், அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படுவதாகவும்,இந்த முகவரமைப்பின் பணிப்பாளர் அதுல புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

சரியான உறுதிப்படுத்தல் செயற்பாடுகளின்றி, 1000இற்கும் அதிகமான இணையத்தளங்கள் முகநூலில் கணக்குகளை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய கணக்குகள் தொடர்பான முகநூல் நிறுவனத்திடம் முறையிடவுள்ளதாகவும் அதுல புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *