அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டோம் – என்கிறது ஜேவிபி
சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது நிலைப்பாடு என்னவென்று இதுவரை முடிவெடுக்கவில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா,
“பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதா, தனியாக வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தேர்தலைப் புறக்கணிப்பதா என்று அடுத்த சில நாட்களில் ஜேவிபி முடிவு செய்யும்.
ஏனையவர்கள் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்தாலும், அதுபோன்று நாமும் செய்ய வேண்டியதில்லை.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முந்திய நாளை வரை முடிவெடுப்பதற்கு எமக்கு அவகாசம் உள்ளது.
ஆளும்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பெரிய அரசியல் எழுச்சியாகமாறலாம்.
நாம் உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுப்போம்.
ஆனால் நாம் அவசரப்பட்டு எமது முடிவை எடுக்கமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.