மேலும்

தொடங்கியது அரசின் தேர்தல் வன்முறை – துப்பாக்கிச்சூட்டில் ஐதேக பிரமுகர் படுகாயம்.

sl.electionசிறிலங்காவில் நேற்று அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் மீதான ஆளும்கட்சியினரின் வன்முறைகளும் ஆரம்பமாகியுள்ளன.

மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடிக் கொண்டிருந்த, ஐதேக ஆதரவாளர்கள் மீது நேற்றுமாலை களுத்துறை மாவட்டத்தில் உள்ள மக்கோனா என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ஐதேக ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்திக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத குழுவொன்று வாகனம் ஒன்றில் வந்து இந்த தாக்குதலை நடத்தியது.

நேற்றுமாலை 6.40 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஐதேகவின் முன்னாள் பேருவளை பிரதேசசபை  உறுப்பினர் சமில ரணசிங்க படுகாயமடைந்தார்.

இவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மாவத்தகம பகுதியில் ஐதேகவின் வாகனத் தொடரணி மீதும் நேற்றுமாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி பணியகத்துக்கு அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் காயமடைந்த்தாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *