மேலும்

தலாய்லாமாவுடன் இணைந்து புதுடெல்லி மாநாட்டை துவக்கி வைத்தார் விக்னேஸ்வரன்

Hindu-confrence-cmசிறிலங்காவில் இந்துக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக, புதுடெல்லியில் நடைபெறும், அனைத்துலக இந்து மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

உலக இந்து காங்கிரசின், மூன்று நாள் அனைத்துலக இந்து மாநாடு நேற்று புதுடெல்லியில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டை திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத்,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து, மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.

இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மீது செல்வாக்குச் செலுத்தும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்குபற்றும் இந்த மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.

நேற்று நடந்த அரசியல் அமர்வு ஒன்றுக்குத் தலைமையேற்று உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்காவில் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, அங்குள்ள இந்துக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

delhi-hindu-congress-cm (1)

delhi-hindu-congress-cm (2)

delhi-hindu-congress-cm (3)

delhi-hindu-congress-cm (5)

delhi-hindu-congress-cm (4)

இந்த மாநாட்டில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத் ஆகியோரும் நேற்று உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 1800 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக, அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *