மேலும்

மரணதண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாண மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் – உறவினர்கள் கோரிக்கை

mariaflorenceபோதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று யாழ்ப்பாண மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே குற்றச்சாட்டுக்காக – ஒரே வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எட்டு மீனவர்களில் ஐந்து பேருக்கு மட்டும் சிறிலங்கா அதிபர் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார்.

எனினும், இந்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், குருநகர் மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த மீனவர்களை விடுவிப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், இதுகுறித்து உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான, மண்டைதீவைச் சேர்ந்த கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜின் மனைவி மரியபுளோரன்ஸ் இதுகுறித்து பிபிசியிடம் தகவல் வெளியிடுகையில்,

“எனது கணவருடன் குருநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன், கமல் கிறிஸ்டி ஆகிய மூவருக்கும், ஐந்து இந்திய மீனவர்களுடன் தண்டனை வழங்கப்பட்டது.

இந்திய மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்படும் போது எங்கள் கணவன்மாரையும் விடுதலை செய்யாதது ஏன்?

அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் நாங்களும் தூக்கில் தொங்குவதைவிட வேறு வழி எங்களுக்கு இல்லை.

இவர்களை விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்த்துத்தான் நாங்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்குப் போயிருந்தோம்.

ஆனால் அவர்களுக்கு மரண தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.

இப்போது அவர்களுடன் தண்டனை வழங்கப்பட்ட இந்திய மீனவர்களை பொதுமன்னிப்பு என்று விடுதலை செய்துவிட்டார்கள்.

ஆனால் எங்கள் உறவுகளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

எனக்கு ஒரு மகன் இருக்கின்றார். எனது கணவரை நம்பித்தான் நாங்கள் வாழ்கின்றோம்.

அவர்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது”, என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *