மேலும்

Tag Archives: பிபிசி

ரணிலையும், மைத்திரியையும் ஒரே அறைக்குள் அடைக்க வேண்டும் -ஜேவிபி

தற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஒரு அறைக்குள் அடைத்து விட வேண்டும் என்று கூறியுள்ளார், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க.

ஐதேக தலைவராக, பிரதமர் வேட்பாளராக நிற்கத் தயார் – சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தியாளரை விசாரிப்பதில் இருந்து பின்வாங்கியது குற்றப் புலனாய்வுப் பிரிவு

சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் கருத்து பதிவிட்டமை தொடர்பாக பிபிசி செய்தியாளரை விசாரணைக்கு அழைத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு, தமது அழைப்பாணையை விலக்கிக் கொண்டுள்ளது.

வேட்பாளர்களின் விபரங்களைத் திரட்டும் சிறிலங்கா இராணுவம் – நியாயப்படுத்துகிறார் தளபதி

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை இராணுவம் வைத்திருக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது – சுமந்திரன்

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2020இல் மைத்திரியை போட்டியில் நிறுத்த சுதந்திரக் கட்சி முடிவு

அடுத்த அதிபர் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிட வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எந்தக் காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை

போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எந்தக் காரணம் கொண்டும் வெளிநாடுகளில் இருந்து நீதிபதிகளை கொண்டு வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சம்பந்தனுடன் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்கிறார் விக்கி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கொழும்பில் நடத்திய பேச்சுக்களின் மூலம், இருவருக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை மாறி புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பின்னர் பேசுவோம் – இரா.சம்பந்தன்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பரப்புரை செய்யப் போவதில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக, தேர்தல் முடிந்த பின்னர் அவருடன் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக தீர்மானிக்கவில்லை – ஜோன் செனிவிரத்ன

மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட உயர்மட்டக் குழு தீர்மானித்திருப்பதாக வெளியான செய்திகளை, அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.