பசிலை வெலிக்கடைக்குள் அடைக்க நீதிவான் உத்தரவு – மே 7 வரை விளக்கமறியல்
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாளை மறுநாள் வரை விளக்கமறியலில் வைக்க, கடுவெல நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாளை மறுநாள் வரை விளக்கமறியலில் வைக்க, கடுவெல நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
புலம்பெயர் சூழலில் தமிழ்க் கல்வி தொடர்பாக தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் கடந்த மே 1ம் நாள் வெள்ளிக்கிழமை, ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கில் பயனுள்ள, காத்திரமான பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள புதிய சூழலைத் தமிழர் தரப்பு, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசடி மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அதிகாரிகளுக்கு பயிற்சி வசதிகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
இலங்கையர்கள் தமது எதிர்காலத்தை வடிவமைக்க எந்த வழியிலான உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று மதியம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வு காணப்படும் என்று, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.