மேலும்

யாழ். நீதிமன்றப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 127 பேர் கைது- மீண்டும் இராணுவ ரோந்து

jaffna-violence- (2)புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, யாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையதாக கொழும்பில் கைது செய்யப்பட்ட மகாலிங்கம் சிவகுமார் மற்றும், அவருக்கு உதவியதாக கூறப்படும், சட்ட விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன் ஆகியோர் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர்.

இந்த நிலையில் யாழ். நீதிமன்றத்தின் பிரதான வீதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள்  முழக்கங்களை எழுப்பி சிறிலங்கா காவல்துறையினருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் தடைகளையும் உடைத்துக் கொண்டு உள்நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றமி மீது கற்கள் , கண்ணாடிப் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

அங்கு நிறுத்தித்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனம், சட்டத்தரணிகளின் வாகனங்கள், காவல்துறையினரின் வாகனங்களையும்  அவர்கள் கற்கள் மற்றும் பொல்லுகள்  கொண்டு தாக்கி  உடைந்தனர்.

jaffna-violence- (1)jaffna-violence- (2)

jaffna-violence- (3)

jaffna-violence- (4)

jaffna-violence- (5)jaffna-violence- (7)

இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர்.

எனினும் சுமார் 2 மணித்தியாலயங்கள் வரை, இரண்டு தரப்பினருக்கும் இடையில் கல்வீச்சுக்கள் இடம்பெற்றன.

ஆர்ப்பாட்டகாரர்கள் யாழ் நகரப்பகுதியில் இருந்த காவல்துறையினரின் காவலரணைத் தாக்கி சேதப்படுத்தியதுடன், யாழ். சிறைச்சாலை மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.

யாழ். நீதிமன்ற வளாகப்பகுதியில், சுமார் 3மணித்தியாலயங்கள் வரை நீடித்த இந்த மோதல்கள், பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் 4 காவல்துறையினரும், ஒரு சட்டத்தரணியும் காயமடைந்துள்ளனர்.

இன்றைய வன்முறைகளுடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைகள் யாழ். மக்களிடையே கடும் அதிருப்தியையும் விசனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக யாழ். நகரப்பகுதியில், மீண்டும் இராணுவக் கவசவாகனங்கள் ரோந்து செல்வதுடன், படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில், இருந்த சக்திகள் குறித்து பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பலரும் மது போதையில் இருந்ததாகவும், யாழ். சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதுடன், தம்மை பிணையில் எடுக்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *