மிதிவண்டி விபத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் கால் முறிந்தது
பிரான்சில் மிதிவண்டி விபத்தில் சிக்கி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி படுகாயமடைந்துள்ளார். அவரது கால் முறிந்த நிலையில் ஜெனிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரான்சில் மிதிவண்டி விபத்தில் சிக்கி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி படுகாயமடைந்துள்ளார். அவரது கால் முறிந்த நிலையில் ஜெனிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்தியா, பிரித்தானியா, தாய்லாந்து, சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சம்பூரில், அண்மையில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட, காணிகளுக்குள் உரிமையாளர்கள் நுழைவதற்குத் தடைவிதித்துள்ள சிறிலங்கா காவல்துறையினர், அங்கு தற்காலிக குடில்களை அமைத்து தங்கியிருந்தவர்களையும், துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், வெளியேற்றியுள்ளனர்.
சிறிலங்கா- சீன பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள் நேற்று சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளன. சங்கிரி லா கலந்துரையாடல் எனப்படும், 14வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ள ஐந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல் படையினரால், காரைக்கால் கடலோரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம் ஊடாக துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதான- விரிவான தேசிய பாதுகாப்புத் திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வகுக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுமாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரான்சில் நேற்றிரவு நடந்த உலகப் புகழ்பெற்ற 68வது கேன்ஸ் திரைப்பட விழாவில், முன்னாள் ஈழப்போராளியின் புலம்பெயர் வாழ்வை சித்திரிக்கும் தீபன் திரைப்படம், Palme d’Or என்ற உயரிய விருதை பெற்றுள்ளது.