மேலும்

Archives

வித்தியா கொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் போராட்டங்களுக்கு அழைப்பு

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு நீதி வழங்கக் கோரியும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டவாளர்கள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இன்றும் போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்களால் கொந்தளிக்கிறது குடாநாடு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தப்பவிடும் முயற்சிகளைக் கண்டித்தும் நடத்தப்பட்ட போராட்டங்களால் யாழ்.குடாநாட்டில் இன்று பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியேன்- மைத்திரி வாக்குறுதி

தேசிய பாதுகாப்புக்கான சகல நடவடிக்கைகளும் தமது அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படும் என்றும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை – சிறிலங்கா காவல்துறை

முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், நடத்தப்பட்ட நினைவுநாள் நிகழ்வு தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சிறிலங்கா காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்று, காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி ரவை வடிவ தீபத்தை ஏற்றி வைத்து போர் வெற்றியை கொண்டாடினார் மகிந்த

போர் வெற்றிக் கொண்டாட்டங்களை சீர்குலைத்தமைக்காக சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நடந்த நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் உயிர்ப்பலியெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் இன்று காலை நினைவுச்சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறிலங்கா படையினரின் பிடியில் க.வே.பாலகுமாரன்- மற்றொரு போர்க்குற்ற ஒளிப்படம்

இறுதிக்கட்டப் போரில், சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன், மற்றும் அவரது மகன் உள்ளிட்ட மூவர் சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய போர்க்குற்ற ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சிறிலங்காவின் போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வில் வழக்கம்போலவே பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு

மாத்தறையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வீரர்களை நினைவு கூரும் தேசிய நிகழ்வில், வழக்கம்போலவே பாரிய இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை வழங்குவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை அன்பளிப்புச் செய்வதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.