மேலும்

மாத்தறை அணிவகுப்பில் ‘காணாமற்போன’ மிக்-27 போர் விமானங்கள்

matara-parade-2015 (1)மாத்தறையில் நேற்று நடத்தப்பட்ட சிறிலங்காவின் படை வலிமையை வெளிப்படுத்தும் இராணுவ அணிவகுப்பில், சிறிலங்கா விமானப்படையிடம் உள்ள மிக் போர் விமானங்கள் இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் இறந்த படையினரை நினைவு கூரும் வகையில் நேற்று மாத்தறையில் சிறிலங்கா அரசாங்கத்தின் போர் வீரர் நினைவு நாள் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

நேற்றுக்காலை நடந்த இந்த இராணுவ அணிவகுப்பு, வழக்கம்போலவே சிறிலங்காவின் படை வலிமையை பாறைசாற்றும் வகையில், அமைந்திருந்தது.

மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக தலைமை தாங்கிய இந்த இராணுவ அணி வகுப்பில், 3255 இராணுவத்தினர், 1615 கடற்படையினர், 916 விமானப்படையினர், 959 காவல்துறையினர், 555 சிவில் பாதுகாப்புப்படையினர் இடம்பெற்றிருந்தனர்.

அத்துடன் சிறிலங்கா படையினரின் 100இற்கும் அதிகமான போர் ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.

matara-parade-2015 (1)

matara-parade-2015 (2)

matara-parade-2015 (3)

matara-parade-2015 (4)

matara-parade-2015 (5)

matara-parade-2015 (6)

matara-parade-2015 (7)

matara-parade-2015 (9)

இவற்றுள் டாங்கிகள், கவசவாகனங்கள், கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள், ரேடர்கள், சமிக்ஞை கருவிகள், வேவுவிமானங்கள், ஆட்டிலறிகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்டவையும் அடங்கியிருந்தன.

அத்துடன், சிறிலங்கா கடற்படையினர், 25 போர்க்கப்பல்கள் கடலில் அணிவகுத்துச் சென்றதுடன், சிறிலங்கா விமானப்படையின் 30இற்கும் அதிகமான உலங்குவானூர்திகளும், போர் விமானங்களும், வானத்தில் அணிவகுத்தன.

எனினும், சிறிலங்கா விமானப்படையிடம் உள்ள, உக்ரேன் தயாரிப்பான மிக்-27 போர் விமானங்கள் நேற்றைய அணிவகுப்பில் இடம்பெறவில்லை.

மிக்-27 விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே, அணிவகுப்பில் அவை இடம்பெறவில்லை.

நேற்றைய அணிவகுப்பில் பெரும்பாலும், கிழக்கு ஐரோப்பிய, சீன ஆயுத தளபாடங்களே அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டன.

போர் நடந்த காலத்தில் மேற்கு நாடுகளில் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், நேற்றைய அணிவகுப்பில் சிறிலங்கா கடற்படையிடம் அமெரிக்க தயாரிப்பான சமுத்ர என்ற போர்க்கப்பல் மற்றும் அதிவேகத் தாக்குதல் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள புஷ்மாஸ்டர் பீரங்கிகளும், விமானப்படையிடம் உள்ள பெல் மற்றும் சி-130 வானூர்திகளும் இடம்பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *