மேலும்

Archives

சிறிலங்கா, தமிழ்நாட்டுக்கு வெள்ள ஆபத்து – வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை பூமியில் விழுகிறது மர்மப்பொருள் – சிறிலங்காவின் தென்பகுதி கடலில் மீன்பிடிக்கத் தடை

விண்வெளியில் இருந்து WTF1190F என்ற மர்மப் பொருள், சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில் நாளை முற்பகல் விழும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடும் நிபந்தனைகளுடன் 31 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கியது கொழும்பு நீதிமன்றம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் இன்று பிற்பகல் கொழும்பு  பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்கவும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் இன்று பதவியேற்றுள்ளனர்.

மரணத்துக்குப் பிந்திய விருப்பம் – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சோபித தேரரின் காணொளி

தனது உடலை தகனம் செய்யாமல், உறுப்புகளை தானம் செய்த பின்னர் புதைக்க வேண்டும் என, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அழைப்பாளர் வண. மாதுளுவாவே சோபித தேரர் விருப்பம் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு வந்தது சோபித தேரரின் உடல் – வரும் 12ஆம் நாள் தேசிய துக்க நாளான பிரகடனம்

சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் காலமான, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய அழைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரரின் உடல் நேற்றிரவு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மர்மப்பொருள் விழும் நாளில் விமானங்கள் பறக்க, மீன்பிடிக்கத் தடை?

விண்வெளியில் இருந்து WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ஆம் நாள், வெள்ளிக்கிழமை விழும் என்று எதிர்பார்க்கப்படும், சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைதீவு அதிபரைக் கொல்ல முயன்றதாக இலங்கையர் கைது – அதிகாரபூர்வமாக அறிவிப்பு

மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீனை படுகொலை செய்ய சதி செய்ததாக,சந்தேகிக்கப்படும் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக, மாலைதீவு அரசாங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நோர்வேயில் குணா. கவியழகனின் ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு

“நஞ்சுண்டகாடு” குணா கவியழகனின் இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு நோர்வே தலைநகர்  ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது தாக்குதல்

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சென்னையில் நேற்றிரவு தமிழ் இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார்.