மேலும்

Archives

வரவுசெலவுத் திட்ட அமர்வின் சுவாரசியங்கள்

சிறிலங்காவின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

சிறிலங்காவின் வரவு செலவுத் திட்டத்தில் விலைக்குறைப்புகள், சலுகைகள் அறிவிப்பு

சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக்குறைப்புகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் உறுதி

தனது பொறுப்பில் உள்ள நிறுவனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பாக 3 சிறிலங்கா கடற்படையினர் கைது?

திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் அமைந்திருந்த இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தின் மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு காலமானார்

யாழ்ப்பாணத்தின் மூத்த ஒளிப்பட ஊடகவியலாளரான எஸ்.கதிரவேலு நேற்று, தனது 83ஆவது வயதில் அகால மரணமானார்.

காணாமற்போனோர் குறித்து நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் – ஐ.நா குழு கோரிக்கை

சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக, அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை அறியத்தரும் வகையில், நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.

திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாமைக் கண்டுபிடித்ததாக ஐ.நா குழு அறிவிப்பு

திருகோணமலை சிறிலங்கா கடற்படை தளத்தில், இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றைத் தாம் பார்வையிட்டதாகவும், அது தமது பயணத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு எனவும், பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு தெரிவித்துள்ளது.

இன்று கூட்டமைப்பை சந்திக்கிறது ஐ.நா குழு – சிறிலங்கா அதிபரிடம் அறிக்கை கையளிக்கிறது

சிறிலங்காவுக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதிகள், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளதுடன், சிறிலங்கா அதிபரைச் சந்தித்து தமது பயணம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளனர்.

துறைசார் வல்லுனர் குழுக்களை அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக துறைசார் வல்லுனர்களைக் கொண்ட குழுக்களை அமைக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உயர்மட்ட படை அதிகாரிகள் 32 பேர் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.