மேலும்

Archives

அனுராதபுர, கம்பகா மாவட்டங்களில் வாக்களிப்பில் அதிக ஆர்வம்

அனுராதபுர, கம்பகா மாவட்டங்களில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராதபுர மாவட்டத்தில், காலை 10 மணியளவிலேயே 40 வீத வாக்குகள் பதிவாகி விட்டதாக மாவட்ட தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காலையிலேயே சுறுசுறுப்பான வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் சென்ற வாக்களித்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு மந்தகதியில் – தெற்கில் விறுவிறுப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்  தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர் யார்?

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரை நேற்று சிறிலங்காவுக்கு நாடு கடத்தியுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

மகிந்தவுக்காக கையெழுத்திடாமல் நழுவினார் பௌசி – மைத்திரியின் பிரதமர் வேட்பாளரா?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், தமக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி குறித்த மைத்திரியின் வாதம் சிறுபிள்ளைத்தனம் – யதீந்திரா

சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி நாடாக இருப்பதுதான் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு நல்லது என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது, சிறு பிள்ளைத்தனமான வாதம்  என்று அரசியல் ஆய்வாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய ஆலோசனை – சிறிலங்காவுக்கான தூதுவர் பதவியேற்பு

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப்  நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், பதவியேற்பு உறுதியுரை எடுத்துக் கொண்டார்.

இந்தியாவின் செல்வாக்கிற்குள் இருப்பதே தமிழ் மக்களுக்கு நல்லது – யதீந்திரா

இலங்கைத்தீவு சீனாவின் ஆதிக்கத்திற்குள் வருவதை விட, இந்தியாவின் நிழலில் இருப்பதே தமிழ் மக்களுக்கு நல்லது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

தோண்டியெடுக்கப்பட்டது தாஜுதீன் சடலம் – வெளிவருமா மகிந்தவின் கோரமுகம்?

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீர்ர் வசீம் தாஜுதீனின் புதைகுழி இன்று தோண்டப்பட்டு, அவரது சடலத்தின் எஞ்சிய பாகங்கள் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

புலிகளின் குண்டுகள் துளைத்த காருடன் திருமலைக்கு பரப்புரை செய்ய வந்த சரத் பொன்சேகா

ஜனநாயக கட்சியின் தலைவரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.