தமிழர்களின் இதயத்தை வென்றால் மட்டுமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்- சிறிலங்கா அதிபர்
உட்கட்டமைப்பு அபிவிருத்தியால் மட்டும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது என்றும், தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதன் மூலமே அதனை அடைய முடியும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.










