மேலும்

Archives

தன்னாட்சிக்கும் நீதிக்கும் அழுத்தம் கொடுக்கும் இலங்கைத் தமிழர்கள் – ஏஎவ்பி

தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான, பரந்துபட்ட தன்னாட்சி உரிமை, சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான விவகாரமாக இருக்கும்.

பூநகரியில் புதிதாக முளைத்தது பௌத்த வழிபாட்டுத் தலம்

கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ரணிலிடம் தோற்கிறார் மகிந்த – கருத்துக் கணிப்பில் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, பிரதமராவதற்கு  வாக்காளர்களிடம் போதிய ஆதரவு இல்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவை விடவும் பின்தங்கிய நிலையிலேயே அவர் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்ப 61 பௌத்த சிங்கள பேரினவாத அமைப்புடனுடன் மகிந்த உடன்பாடு

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச 61 சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

கொழும்பில், இன்று நண்பகல் ஐதேகவின் தேர்தல் பரப்புரையார்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் ஐதேக ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, 12 பேர் காயம்

கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஐதேக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.

சிறிலங்காவிலும் கொண்டாடப்பட்ட சீன இராணுவத்தின் ஆண்டுவிழா

சீனாவில் மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்ட 88 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் சிறிலங்காவிலும் இடம்பெற்றுள்ளன.  கடந்த செவ்வாய்க்கிழமை (28ஆம் நாள்) கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி விடுதியில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

சிறிலங்காவின் மிகஉயர்ந்த கட்டடத்தை அமைக்கிறது இந்தியா

சிறிலங்காவில் 96 மாடிகளைக் கொண்ட, மிகஉயரமான கட்டடத்தை கொழும்பின் ராஜகிரிய பகுதியில், இந்திய நிறுவனம் ஒன்று, அமைக்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

நாளை இராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் இறுதி நிகழ்வு

மேகாலயா மாநிலத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்றுமுன்தினம் இரவு காலமான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் இறுதிநிகழ்வு, நாளை அவரது சொந்த இடமான இராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது.

13க்குள் தான் அரசியல் தீர்வாம் – இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிறார் மகிந்த

சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்குள்- மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும், அரசியல் தீர்வு ஒன்று, ஆட்சியமைத்து ஆறுமாதங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.