ஊடகவியலாளரைத் தாக்க முயன்ற பிள்ளையான்
விளக்கமறியலில் உள்ள, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விளக்கமறியலில் உள்ள, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வட மாகாண சுகாதார அமைச்சர், சத்தியலிங்கத்திடம் இருந்து மூன்று அமைச்சுப் பொறுப்புக்களை மீளப் பெற்றுக் கொண்டமைக்கான காரணம் குறித்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பொருட்களுடன், பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டாவது விமானம் இன்று கட்டுநாயக்கவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்கவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக- ஆறாவது தடவையாக, செல்வி ஜெயலலிதா இன்று நண்பகல் பதவியேற்றார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், கோலாகலமாக நடந்த நிகழ்வில், மாநில ஆளுனர் ரோசய்யா முன்னிலையில், ஜெயலலிதா பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கொழும்பு மற்றும் கம்பகா மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து, இந்தியக் கடற்படை மருத்துவக் குழுக்களும், மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன.
சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது என்பது தெளிவாக நோக்கப்பட வேண்டிய நிலை காணப்படும் அதேவேளையில் இந்தியாவும் திருகோணமலையில் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது.
சிறிலங்காவில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா அனுப்பி வைத்த அவசர நிவாரண உதவிப்பொருட்களை ஏற்றிய ஐஎன்எஸ் சுனைனா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிபுணர் குழுக்களையும் இந்தியா கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.