மேலும்

Archives

சம்பந்தனைச் சந்தித்தார் நோர்வே இராஜாங்கச் செயலர்

இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த, நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹட்ரெம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வட,கிழக்கில் மீள்குடியேற்றம் – உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறிலங்கா அதிபர் அவசர கூட்டம்

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது தொடர்பாக, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் அமைச்சுக்களின் செயலர்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பேச்சுக்களை நடத்தினார்.

தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்துக்காக போரை நிறுத்தினர் புலிகள் – தென்கொரியாவில் ரணில்

தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்துக்காக விடுதலைப் புலிகள், தாமாகவே போரைநிறுத்த முன்வந்தனர் என்று தென்கொரியாவில் நடந்த அனைத்துலக ரோட்டரிக் கழகத்தின் 107ஆவது மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பங்களாதேஸ் பிரதமருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு – டிசெம்பரில் டாக்கா செல்கிறார்

பங்களாதேஸ் தலைநகர் டாக்காவுக்கும், கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கு இரு ரோந்துப் படகுகளை வழங்குகிறது ஜப்பான்

கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுத்திகரிப்பு பணியில் அமெரிக்கப் படையினர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க படையினரின் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் நேற்று ஈடுபட்டது.

பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் ரணில் ஆலோசனை

போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறையை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று, பாதுகாப்புச்செயலர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஜி-7 நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை

சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஜி-7 நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜி-7 நாடுகளின் தலைவர்களை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு முதலமைச்சர்

கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்கத் தூதுவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், ஓரமாக ஒதுங்கி நிற்குமாறு சைகை காட்டிய கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட், நிகழ்வு மேடையிலேயே வைத்து கண்டபடி திட்டித் தீர்த்தார்.